Sunday, April 28, 2024
Home » இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகரின் சான்றுரை

இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகரின் சான்றுரை

by Rizwan Segu Mohideen
November 2, 2023 1:07 pm 0 comment

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (01) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த சிரேட்ட அறிவுறுத்தும் சட்டத்தரணிகள் என்ற கெளரவிப்பை அளித்தல் எனும் சட்டமூலத்துக்கு சபாநாயகர் தனது சான்றுரையை வழங்கியுள்ளார். இந்த சட்டமூலம் ஒக்டோபர் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டை அடுத்து நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தனியார் பிரேரணையாக முன்வைத்த பலப்பிட்டிய ஸ்ரீ ராஹுலராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக்ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) எனும் சட்டமூலத்தையும் சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளார். இந்த சட்டமூலம் ஒக்டோபர் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பலப்பிட்டிய ஸ்ரீ ராஹுலராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக்ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சிரேட்ட அறிவுறுத்தும் சட்டத்தரணிகள் என்ற கெளரவிப்பை அளித்தல் சட்டம் என்பன இன்று (01) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT