Sunday, April 28, 2024
Home » நுவரெலியா கிரேகரி வாவி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
உல்லாச பயணிகள் அதிகமாக நேசிக்கும்

நுவரெலியா கிரேகரி வாவி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் முன்னெடுப்பு

by mahesh
October 18, 2023 9:16 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நுவரெலியா கிரேகரி வாவியை அபிவிருத்தி செய்யும் பணிகள் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தலைமையில் நேற்று (17) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த நுவரெலியா கிரேகரி வாவியின் அபிவிருத்தி பணிகள் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில், “Green Industrial” தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையைக் கழிக்க நுவரெலியாவை அதிகமாக தேர்வு செய்கிறார்கள், குறுகிய விடுமுறை முதல் நீண்ட விடுமுறை வரை நுவரெலியாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் இவர்கள் அதிகமான நேரத்தினை

கிரேகரி வாவி சுற்றுச்சூழலில் செலவிடுகின்றனர்.

அதேநேரத்தில் முறையற்ற மனித செயற்பாடுகளினால் கிரேகரி வாவிக்கு நீரினை ஏந்திவரும் உப கால்வாய்கள் வழியாக கழிவுகளும் வந்து சேர்கின்றன.

மேலும் கிரேகரி வாவியின் சுற்றுவட்டம் மற்றும் வாவி பகுதியின் சுற்றுச்சூழலும் மாசடையும் வகையில் வாவியின் அழகுக்கு பாதகம் ஏற்படுகின்றது.

நீண்ட நாள் பிரச்சினையாக இந்த விடயம் காணப்பட்ட நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டு இதற்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.

ஆ.ரமேஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT