Sunday, April 28, 2024
Home » ஜனாதிபதி 4 நாள் சீன விஜயம்; 5 பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி 4 நாள் சீன விஜயம்; 5 பதில் அமைச்சர்கள் நியமனம்

- இன்று முதல் அமுல்

by Rizwan Segu Mohideen
October 16, 2023 9:36 am 0 comment

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு (15) சீனா பயணமாகியுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி இன்று (16) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கின்றார்.

ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று (16) முதல்,

  1. இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு பதில் அமைச்சராகவும்
  2. இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி பதில் அமைச்சராகவும்
  3. இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் – தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும்
  4. இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் – பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும்
  5. வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி – சுற்றாடல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான செய்திகள்...

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT