Thursday, May 2, 2024
Home » FACETS Sri Lanka கண்காட்சி 2024:

FACETS Sri Lanka கண்காட்சி 2024:

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணசங்கத்தினால் ஏற்பாடு

by gayan
October 12, 2023 6:00 am 0 comment

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணஅதிகாரசபை (NGJA), ஏற்றுமதிஅபிவிருத்திசபை (EDB) ஆகியவற்றுடன் இணைந்து, ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரணக்கண்காட்சியான FACETS Sri Lanka நிகழ்வை, எதிர்வரும் 2024 ஜனவரி 06 முதல் 08 வரை சினமன்கிராண்ட்ஏட்ரியம் லொபியில் நடத்தவுள்ளதாக, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணசங்கம் (SLGJA) அறிவித்துள்ளது.

2002 இல் உருவாக்கப்பட்ட SLGJA, இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறையின் உயர்அமைப்பாகும். இது இத்துறையில் உள்ள அனைத்து துணைப்பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை நாட்காட்டியில், FACETS Sri Lanka கண்காட்சி ஒரு முக்கிய நிகழ்வாக இடம்பிடித்துள்ளது. அந்தவகையில் இந்த வருடமும், உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறையின் சந்திப்புமையமாக அது அமையவுள்ளதோடு, உலகம் முழுவதிலுமிருந்து மொத்தவிற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், பட்டைதீட்டுவோர், சில்லறை விற்பனையாளர்கள், சேகரிப்பாளர்கள், முக்கியமான வர்த்தகர்களுக்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களை ஈர்க்கும் வகையில் செயற்படும்.

எதிர்வரும் நிகழ்வுகள் மற்றும் FACETS Sri Lanka 2024 கண்காட்சியின் புதிய அம்சங்கள் பற்றி FACETS Sri Lanka அமைப்பின் தலைவர் அல்தாப் இக்பால் கருத்து வெளியிடுகையில், “FACETS Sri Lanka கண்காட்சியின் 30ஆவது பதிப்பு 2024 ஜனவரியில் இடம்பெறவுள்ளதை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இக்கண்காட்சியில் Sustainable Pavilion மற்றும் Sapphire Masterpiece Pavilion ஆகியன புதிய சேர்க்கைகளாக மேற்கொள்ளப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.

FACETS Sri Lanka 2024 இல் Premier Gem Pavilion, Premier Jewellery Pavilion, Sustainable Pavilion, Sapphire Masterpiece Pavilion, Rough Stone Pavilion, Gem Lab Pavilion, NGJA SME Pavilion, SLGJA Gem and Jewellery Pavilion உள்ளிட்ட பல காட்சிமேடைகள் காட்சிப்படுத்தப்படும். இந்நிகழ்வில் ‘Reminisce of the Past’ (கடந்த காலத்தை நினைவுகூருதல்) எனும் விசேட நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

FACETS Sri Lanka கண்காட்சியில் இம்முறை முதன்முறையாக இடம்பெறும் Sustainable Pavilion ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறையின் வரலாற்றுப் பரிணாமத்தையும், அதன் நிலைபேறான தன்மை தொடர்பான முறைகள் மற்றும் அணுகுமுறைகளையும் காண்பிக்கும். இலங்கையில் முதல்தடவையாக இடம்பெறும் மற்றுமொரு அம்சமாக Sapphire Masterpiece Pavilion அமையும். இது மிகப்பாரிய, விலையுயர்ந்த இரத்தினக்கற்களைக் காட்சிப்படுத்தும். அத்துடன் நிகழ்ச்சியின் இறுதிநாளில் அவை விற்பனைக்கு வரும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT