Sunday, April 28, 2024
Home » “SAEEDA” நிறுவன நிதி உதவியில் கம்பஹா மற்றும் மினுவாங்கொடை பிரதேச பாடசாலைகள் அபிவிருத்தி

“SAEEDA” நிறுவன நிதி உதவியில் கம்பஹா மற்றும் மினுவாங்கொடை பிரதேச பாடசாலைகள் அபிவிருத்தி

by damith
October 10, 2023 11:15 am 0 comment

கம்பஹா மற்றும் மினுவாங்கொடை கல்விப்பிரிவிலுள்ள வளப்பற்றாக்குறையுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்து கல்விக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் “SAEEDA” நிறுவனம் முன்வந்துள்ளது. நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினருமான நௌஸர் பௌஸியின் எண்ணக்கருவில் இந்நிறுவனம் தனது சேவையினை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து
வருகிறது.
மேற்படி கல்விப்பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் மினுவாங்கொடை கல்வி வலய காரியாலயத்தில் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌஸியின் பங்குபற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது. இதன் கீழ் மினுவாங்கொடை வலய கல்விப் பிரிவில் உள்ள 8 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், இப்பாடசாலைகளுக்கு 100 இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் மினுவாங்கொட நில்பனாகொட மகா வித்தியாலயம், ஹொரம்பெல்ல சீலவிமல மகா வித்தியாலயம், மினுவாங்கொட கோரச ரணசிங்க மகா வித்தியாலயம், நெதகமுவ கனிஷ்டப் பாடசாலை, ஓபாத ஸ்ரீ குணானந்தா ஆரம்பப் பாடசாலை, உடுகம்பல றோமன் கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலை, உடுகம்பல ஆரம்பப் பாடசாலை மினுவான்கொட மற்றும் அல் அமான் முஸ்லிம் பாடசாலை என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ் இப்பாடசாலைகளின் பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT