Monday, April 29, 2024
Home » அரசபணி புரிவோரில் மூளைசாலிகள் வெளியேற்றம் என்பது கட்டுக்கதை!

அரசபணி புரிவோரில் மூளைசாலிகள் வெளியேற்றம் என்பது கட்டுக்கதை!

by damith
October 10, 2023 6:25 am 0 comment

சமீப காலமாக இளைஞர் சமுதாயம் வேலைவாய்ப்பு மற்றும் கல்விவாய்ப்புக்களைத் தேடி வெளிநாடு செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. உலகளாவிய கல்வி வாய்ப்புகள், உலகளாவிய தொழிற்சந்தையின் விரிவாக்கம் ஆகியன உலகப் பொருளாதாரத்துடன் தொடர்புடைய நிலையானதன்மை ஆகும். உலகப் பொருளாதார முறைக்கு ஏற்ற தொழில்சார் அறிவுமற்றும் கல்விச் சான்றிதழ்கள் உள்ளவர்கள் வெளிநாடு செல்கிறார்கள். பலர் இதனை ‘நூற்றாண்டின் பாரிய மூளைசாளிகள் வெளியேற்றம்’ என வரையறுக்க முயற்சிக்கின்றனர். இது பாரியதொரு கட்டுக்கதைஆகும்.

அரச ஊழியர்கள் என்பவர்கள் பயிற்சி மற்றும் நிபுணத்துவம் கொண்ட தொழில்வாண்மையாளர்கள் ஆவார்கள். நாட்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியத்திலிருந்து சம்பளம் பெறும் ஊழியர்கள் பொதுநிர்வாக சுற்றறிக்கை 14/2022 பிரகாரம் 5 ஆண்டுகளுக்கு உள்நாட்டு/வெளிநாட்டு விடுமுறை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு நாட்டில் மூளைசாலிகள் வெளியேற்றம் நிகழுமாயின் மருத்துவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவை மூலம் அது அளவு ரீதியாக வெளிக்காட்டப்படல் வேண்டும்.

மேற்குறித்த சுற்றறிக்கையின்படி, 2023.09.15 இல் ஒட்டுமொத்த அரச சேவையின் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் விசேட செலவினப் பிரிவுகளில் 483,238 அலுவலர்களில் 2,709 (0.56%) பேர் சம்பளமற்ற ஐந்தாண்டு விடுமுறை பெற்றுள்ளனர். அதேபோன்று, மாகாண அரச சேவையில் உள்ள 398,528 மொத்த அலுவலர்களில் 1,170 (0.3%) பேர் வெளிநாட்டு விடுமுறை பெற்றுள்ளனர். அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைஆகியவற்றில் 3,879 ஊழியர்கள் (0.32%) வெளிநாடு சென்றுள்ளனர். இது சுமார் 12 இலட்சம் பேரைக் கொண்ட அரச சேவை மீது பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு விடயம் அல்ல.

ஒட்டுமொத்த அரச சேவையில் 0.32% சதவீதம் சம்பளம் இன்றி விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஒரு பின்னணியில் இலங்கை பாரியளவு மூளைசாலிகள் வெளியேற்றம், பேரழிவு, பாரியதொரு அனர்த்தத்தின் அடிநாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆச்சரியம் என்னவெனில், இந்த நாட்டில் 1,506 அரச ஊழியர்கள் சம்பளமற்ற 5 ஆண்டுகால உள்நாட்டு விடுமுறையில் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதாகும். அவர்களில் 79 பேர் பதவிநிலை அலுவலர்கள் ஆவார்கள். மீதி 1,427 பேர் பதவிநிலை சாராத அலுவலர்கள். இதன் மூலம் கருதப்படுவது யாதெனில் வெளிநாடு செல்பவர்களில் சுமார் அரைவாசிப் பேர் சம்பளமற்ற விடுமுறை பெற்று உள்நாட்டில் தங்கியுள்ளார்கள் என்பதாகும். அதாவது,அரச அலுவலர்களின் மூளைசாலிகள் வெளியேற்றம் என்பதுஒரு கட்டுக்கதைஆகும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 5 ஆண்டுகால விடுமுறை பெறும் முறையானது தொழில்முறைத் திறன் மற்றும் துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்கள் அரசாங்கம் வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி – வெளிநாட்டில் வேலை செய்து தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

ஒரேவகையான பொய்யை ஆயிரம் முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பது ‘கொபெல்ஸ்’ கோட்பாடுஆகும். நடைமுறையில் அரச சேவையில் உள்ள வைத்தியர்கள், விரிவுரையாளர்கள், அரச ஊழியர்கள் இடம்பெயர்தல், மூளைசாலிகள் வெளியேற்றம் என்பது ஏழு காகங்கள் சொல்லும்காகத்தின் சிறகுகள்பற்றிய கதைஆகும். தரவு மற்றும் புள்ளிவிபரம் மூலம் வெளிப்படுத்தப்படும் ஒரு கட்டுக்கதைஆகும்.

பல்கலைக்கழகங்கள் – தரவுகள் கூறும் உண்மை:

இலங்கையிலுள்ள 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் உட்பட பல்கலைக்கழக ஆணைக்குழுவின் கீழ் உள்ள 22 நிறுவனங்களில் 143 பேர் 2023 இல் இரண்டு வருடங்களுக்கு மேல் விடுமுறை பெற்று வெளிநாடு சென்றுள்ளனர். 2022 இல் வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 228 ஆகும். 1971 இல் இலங்கையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுள் 45% சதவீதம் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 1974 இல் மருத்துவப் பட்டம் பெற்றவர்களுள் 45 சதவீதம் இங்கிலாந்துக்கு மட்டும் குடிபெயர்ந்துள்ளனர். தற்போது 0.32% சதவீதம்அரச சேவையில் 5 ஆண்டுகால விடுமுறை பெற்று வெளிநாடு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வராவிட்டால் நாடு வீழ்ந்துவிடுமா? இல்லை!

2020 முதல் 2023 ஓகஸ்ட் 31வரை பல்கலைக்கழகங்களில் ஏழு ஆண்டுகால விடுமுறை பெற்ற எண்ணிக்கை பற்றிப் பார்ப்போம். கொழும்பு (80), பேராதனை (41), ஜயவர்தனபுர (35), களனி (54), திறந்த பல்கலைக்கழகம் (17), ருஹுணு (81), ரஜரட்ட (10), தென்கிழக்கு (8), கட்புல மற்றும் கலை (13) என்றவாறு விடுமுறை பெற்று இலங்கையில் தங்கியிருக்கும் போது, ​​வெளிநாடுகளில் அதனை விடவும் குறைவான எண்ணிக்கையினர் உள்ளனர். ஏழுஆண்டுகால விடுமுறையில் வெளிநாடு செல்லாமல் இலங்கையில் தங்கியிருக்கும் விரிவுரையாளர்கள் மத்தியில் எவ்வாறு பாரியதொரு மூளைசாளிகள் வெளியேற்றம் ஏற்பட முடியும்?

ஏழு ஆண்டுகால விடுமுறை என்பது, சம்பளத்துடனான விடுமுறை ஆகும். உரிய காலஎல்லைக்குள் எந்தவொரு திகதியிலும் சேவைக்கு சமூகமளிக்க முடியுமான, தொழில் பாதுகாப்பு பற்றிய எதுவித அபாயமும் அற்ற (0% Job Risk) ஒரு சிறப்புரிமை ஆகும். 2020 முதல் 2023 வரை ஏழு ஆண்டுகால விடுமுறை பெற்று வெளிநாடு செல்வதற்குப் பதிலாக இலங்கையில் தங்கும் ஒரு போக்கு கொழும்பு பல்கலைக்கழக கலை, கல்வி (100), சுதேச மருத்துவம் (100), சட்டம் (100), விஞ்ஞான மற்றும் மருத்துவ பீடங்களிலும் (வெளிநாடு செல்வதற்குப் பதிலாக இலங்கையில் தங்குதல்)மாற்றமின்றி அதேவிதமாக காணப்படுகிறது.

பேராதனை பல்கலைக்கழக கலை, பல் மருத்துவம், பொறியியல், முகாமைத்துவம் மற்றும் விஞ்ஞான பீடங்களின் விரிவுரையாளர்கள் இலங்கையில் தனியார் துறையில் இணைவதைத் தவிர வெளிநாடு செல்வது குறைந்தளவாகவே காணப்படுகிறது. களனிப் பல்கலைக்கழக கணனி, சமூக விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் விஞ்ஞான பீடங்களின் விரிவுரையாளர்கள் ஏழுஆண்டுகால விடுமுறைபெற்று இலங்கையில் தங்குவதுடன்அவர்கள் வெளிநாடு செல்லவில்லை. விடுமுறை பெற்று வெளிநாடு செல்லாமல் பெரும்பாலானோர் இலங்கையில் தனியார் துறையில் இணைகிறார்கள் அல்லது தொழில்முயற்சியில்/தொழில்களில்ஈடுபடுகிறார்கள்.

2020_-23 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல்கற்கை விடுமுறை பெற்றுக்கொள்ளும் ஒரு போக்கு பற்றிக் கருத்திற் கொள்கையில்,விரிவுரையாளர்கள் இந்த நாட்டில் தங்காமல் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இது புதியதொரு நிலைமை அல்ல.

மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாக பரபரப்பாக பேசப்பட்ட கதையானது சுகாதாரத் துறையின் அனைத்துவித முகாமைத்துவக் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். எதிர்வரும் நான்கு மாதங்களில் குறைந்தபட்சம் 2,100 வைத்தியர்கள் அரச சேவையில் இணையவுள்ளார்கள். 2023 ஒக்டோபரில் 567 வெளிநாட்டுப் பட்டதாரிகளும், 1,056 இந்த நாட்டு மருத்துவ பீட பட்டதாரிகளும், 450 கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டதாரிகளும் இதில் உள்ளடங்குவர். ‘நூற்றாண்டின்மாபெரும் வைத்தியர்கள் பற்றாக்குறை’ என்பது தரவுகளின் அடிப்படையில் அமையாத ஒரு கட்டுக்கதைஆகும்.

சமீபத்தில் உள்நாட்டு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் ஒரு போக்கு (மூளைசாளிகள் வெளியேற்றம்) உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இன்றைய நிலைவரப்படி, 1,300 சுதேச மருத்துவர்கள் (ஆயுர்வேத, யுனானி) அரசாங்க வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். 2024 பெப்ரவரி 28 ஆம் திகதியளவில் மேலும் 300 சுதேச மருத்துவர்கள் தமது பயிற்சிகளை நிறைவுசெய்து அரசாங்க வேலைவாய்ப்பு பெறாத ஆயுர்வேத மருத்துவர்களின் வரிசையில் இணையவுள்ளார்கள். ஐரோப்பா, மத்தியகிழக்கு மற்றும் அவுஸ்திரேலியாஆகிய நாடுகளின் தொழிற்சந்தையில் அவர்களுக்கான தேவை உள்ளது. முதியோர் பராமரிப்பு, பாரம்பரிய மருத்துவமுறைகள், நோய்த் தடுப்பு போன்ற துறைகளில் ‘உலகளாவிய தொழில் தேவையினைப் பூர்த்தி செய்தல்’ தொடர்பில் இவர்களில் ஒரு பகுதியினர் கவனம் செலுத்தி வருகின்றனர். நாட்டில் அதிகளவு தேவை காணப்படாத பயிற்சி பெற்ற நிபுணர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவது இலங்கையின் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் ஒருவிடயம்ஆகும். இந்தியா, கொரியா, சீனாஆகிய நாடுகளின் வைத்தியர்கள் இலங்கைக்கு வந்து அவர்களின் பாரம்பரிய மருத்துவமுறைகள் மூலம் இலங்கையர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இந்த நாட்டு ‘ஹெல’ மருத்துவமுறையைத் (பாரம்பரிய மரபுரீதியான மருத்துவம்) தேடி வருடாந்தம்ஆறாயிரத்துக்கும்மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகிறார்கள். பன்மைத்துவத்தன்மை உலகப் பொருளாதாரத்திற்குஅழகுசேர்க்கிறது.

சுகாதாரத் துறையின் அதிகூடிய ஊழியர் பற்றாக்குறை (அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் சதவீதமாக)கதிரியக்கவியலாளர்கள், ஒலியியல் நிபுணர்கள், மருந்தாளர்கள் மற்றும் தாதியர் சேவை ஆகியவற்றில் காணப்படுகிறது. தற்போது நாட்டில் பயிற்சியை முடித்த 3,000 தாதியர்களும் 1,000 மருந்தாளர்களும் உள்ளனர். அவர்களுக்கு நியமனம் வழங்கி இந்த ஊழியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்தல் வேண்டும். அப்போதுதான் நோயாளிகளின் துன்பங்களை முடிவுக்கு கொண்டுவர முடியும். இல்லையெனில், இந்தப் பயிற்சிபெற்ற ஊழியர்கள் மொத்தமாக வெளிநாடுகளில் தங்கள் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவார்கள்.

விரிவுரையாளர் பற்றாக்குறை தொடர்பில் அண்மையில் கோப் குழுவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட மாணவர் ஆசிரியர் விகிதாசாரத்தின் பிரகாரம் இலங்கையில் 12,992 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும் எனவும் தற்போது 6,548 பேர் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இது பல்கலைக் கழகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை அல்ல, மாறாக ‘இருக்கவேண்டியதென கருதக்கூடிய’ அண்ணளவான எண்ணிக்கையாகும்.2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை 8,393 ஆகும். பல்கலைக்கழகங்களுக்கு அதற்கு மேலாக ஒரு ஊழியரையேனும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு சட்டத்தின்படிஇடமில்லை.

இலங்கையின் மருத்துவபீடங்களில் 1600-_ 1700 நிரந்தர ஊழியர்கள் இருக்க வேண்டிய போதும் 800 பேர் இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. இது உண்மைக்குப் புறம்பானதாகும். எந்தவொன்றையும் உள்வீட்டிற்குள் தீர்த்துக் கொள்ளாதுஅவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் மனித வளபற்றாக்குறையிருப்பதாகப் பொய்ப்பிரசாரத்தைப் பரப்ப முயல்கின்றனர்.

ஏழு ஆண்டுகால விடுமுறை பெறும் மருத்துவ பீடங்களில் பெரும்பாலானோர் வெளிநாடு செல்லாமல், இந்நாட்டில் தனியார் துறையில் பணிபுரிகின்றனர் என்பதே உண்மை நிலைமை ஆகும். கொழும்பு மருத்துவ பீடத்தில் இருவர் வெளிநாடு செல்லும்போது25 பேர் தனியார் துறையில் பணிபுரிகின்றனர். பேராதனையிலிருந்து 6பேர் வெளிநாடு சென்றுள்ளனர். 9 பேர் இந்நாட்டின் மருத்துவ சேவையில் உள்ளனர். களனியில் 2 பேர் வெளிநாடு செல்லும்போது, 7 பேர் இலங்கையில் நோயாளிகளைப் பார்க்கின்றனர். ருஹுணவில் தலா 4 பேர்வீதம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் பணியாற்றுகின்றனர். யாழ்ப்பாணத்தில் 12 பேர் வெளிநாடு செல்லும்போது, 22 பேர் இலங்கையில் தனியார் துறையில் சிகிச்சையளிக்கின்றனர்.

உண்மையில் வெளிநாடு செல்வது யார்?

இடைநிலைக் கல்விபெற்ற கணிசமான இளைஞர்கள் வெளிநாடு செல்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மை ஆகும். அவர்கள் அரச பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளா, அல்லது வெளிநாட்டுத் தொடர்புகளுடன் தனியார் நிறுவனங்களில் உயர்கல்வி கற்றவர்களா என்பதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்.

இடைநிலைப் பாடசாலைக் கல்விக்கும் பல்கலைக்கழக நுழைவுக்கும் இடையே உள்ள காலஇடைவெளி காரணமாக வளங்கள் மற்றும் இயலுமான மாணவர்கள் மாற்று உயர்கல்வித் தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உலகப் பொருளாதாரத்தில் அதிகளவு தேவையுள்ள பாடங்களைத் தெரிவு செய்கிறார்கள். தொழில் புரியும் இடம் இலங்கையா, அல்லது உலகில் வேறு இடமா என்பதை இனிமேல்அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரம் தீர்மானிப்பதில்லை.

மருத்துவர்கள் வெளிநாடு செல்வது பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதைகளால் உண்மை நிலைமை மறைக்கப்பட்டுள்ளது. தெற்கு (220), மத்திய (218), சபரகமுவ (144), வடமேற்கு (149) ஆகியவற்றைப் பொறுத்தவரையில், மேல் (9) மாகாண சபையின் அலுவலர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அரிதாகவே காணப்படுகிறது. அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்குரிய முக்கியகாரணம் வளப்பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வு என்பதனை மனவேதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

கொழும்பு புத்தகக் கண்காட்சியில் சிங்களப் புத்தகக் கூடங்களின் அளவு சுருங்கி வருவதையும், ஆங்கிலப் புத்தகக் கூடங்களின் அளவு மற்றும் புத்தகங்களின் எண்ணிக்கைவேகமாக வளர்ந்து வருவதனையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இந்த புத்தகங்களை தற்போது உயர்கல்வி படித்து எதிர்காலத்தில்தொழிற் சந்தையில் இணையும் இளைஞர் சமுதாயம் கொள்வனவு செய்துள்ளது. இலங்கை போன்ற ஒரு சுதந்திர நாடு அவர்கள் வசதியான வேலைவாய்ப்புகள் நிலவும் ஒரு நாட்டிற்கு குடிபெயர்வதை எவ்வகையிலும் தடுக்க முடியாது.

உலகளாவிய பொருளாதாரம் தேவை நிலவும் மற்றும் தேவை நிலவாத தொழில்துறைகளை வரைவிளக்கணப்படுத்தி வருகிறது. பூகோள மனிதன் தொழில் புரியும் இடம் அதற்கேற்ப தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தடுப்பதற்கு இலங்கையானது கியூபா அல்லது வடகொரியா போன்ற ஒரு சோஷலிச நாடு அல்ல!

ரஜித் கீர்த்தி தென்னகோன் தென்மாகாண முன்னாள் ஆளுநர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT