Sunday, April 28, 2024
Home » ‘ஸ்கை’ டைவிங் செய்து 104 வயது மூதாட்டி உலக சாதனை

‘ஸ்கை’ டைவிங் செய்து 104 வயது மூதாட்டி உலக சாதனை

by sachintha
October 6, 2023 6:10 am 0 comment

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 104 வயது மூதாட்டி ஒருவர், ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார்.
சிக்காகோ மாகாணத்தை சேர்ந்த 104 வயதான டொரோத்தி ஹாஃப்னர் என்ற மூதாட்டியே, இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு ‘ஸ்கை’ டைவிங் செய்வதில் நீண்ட நாட்களாகவே ஆர்வம் இருந்து வந்ததால், இதற்காக முறையான பயிற்சியும் பெற்று

வந்ததாகவும் கூறியுள்ளார். அதிகபட்ச உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவென, டொரோத்தி ஹாஃப்னர் தெரிவித்துள்ளார். கடந்த 2022 மே மாதம் சுவீடனைச் சேர்ந்த 103 வயது லினியா இங்கேகார்ட் லாசன் என்பவர் ஸ்கை டைவிங் செய்து, உலகின் மிகவும் வயதான ஸ்கை டைவர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார்.

இதனை முறியடிக்க விரும்பிய டொரோத்தி, சிகாகோவில் சுமார் 13 ஆயிரத்து 500 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். இதன் மூலமாக மிக அதிக வயதில் ஸ்கை டைவிங் செய்தவர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT