Saturday, May 4, 2024
Home » லீடர் MHM அஷ்ரப் வித்தியாலயம் கல்முனை மட்டத்தில் முதலிடம்

லீடர் MHM அஷ்ரப் வித்தியாலயம் கல்முனை மட்டத்தில் முதலிடம்

by Rizwan Segu Mohideen
September 27, 2023 2:16 pm 0 comment

கமு/கமு லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம், அண்மையில் நடைபெற்ற சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் கல்முனை வலய மட்டத்தில் தரம் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் முதலிடம் பெற்றுள்ளது. 

இதற்காக மாணவர்களை பயிற்றுவித்த பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் MFM. றிபாஸ் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ANM.ஆபாக் ஆகியோரையும் மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பாராட்டும் நிகழ்வு இன்று (27) பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாடசாலையின் அதிபர் MI. சம்சுதீன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரால் மாலை அணிவித்து கௌரவித்தனர்.

கல்முனை வலயத்துக்குட்பட்ட ஐந்து கோட்டங்களில் இருந்து கலந்து கொண்ட பத்து பாட சாலைகளிலே இந்த பாடசாலை முதல் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT