Sunday, April 28, 2024
Home » சவூதி அரேபியாவின் தேசிய தினத்துக்கு ‘அல் ஹிமா’ அமைப்பு வாழ்த்து

சவூதி அரேபியாவின் தேசிய தினத்துக்கு ‘அல் ஹிமா’ அமைப்பு வாழ்த்து

by damith
September 25, 2023 8:03 am 0 comment

சவூதி அரேபிய நாட்டின் முடிக்குரிய இளவரசர் முகம்மத் பின் சல்மான் அவர்கள் மேற்கொள்கின்ற செயற்பாடுகளும் வியூகங்களும் அரசியல் திட்டங்களும் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு பலமான ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகின்ற அளவு இஸ்லாமிய வல்லரசை நோக்கி செல்கின்ற நிலையை நாங்கள் விளங்கிக் கொள்ளலாமென சவூதி அரேபியாவின் 93ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ‘அல்ஹிமா’ இஸ்லாமிய நலன்புரி அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். நூறுல்லாஹ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தனது செய்தியில், இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்கள் உண்மையில் முகம்மத் பின் சல்மான் அவர்களுடைய செயற்திட்டங்களில் திருப்திகாண்கின்ற ஒரு நிலையை நாங்கள் காணுகின்றோம். காரணம்; உலக முஸ்லிம்களுக்கு ஒரு பலமான சக்தி, வலுவான ஒரு அரசியல் தலைமைத்துவம், உலகத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாடு என்ற வகையில் சவூதி அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் பாராட்டப்பட வேண்டிய ஒரு நம்பிக்கை வைக்கக்கூடிய நிலையிலே சென்று கொண்டிருக்கின்றது.

நவீன கால உலக செயல்திட்டங்களோடும் நவீனகால உலக பரிமாற்றங்களோடும் ஒன்றுபட்டு செயல்படக்கூடிய அனைத்து மனித சுதந்திரங்களையும் கொடுத்து ஒரு நல்ல ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதில் சவூதி அரசின் செயற்பாடு அதன் நடவடிக்கைகள் உண்மையில் பாராட்டப்பட வேண்டும். வரலாற்றில் நாம் காணுகின்ற ஒரு உண்மைதான் எங்களுடைய அதிகபட்ச நம்பிக்கை எங்களுடைய அதிகபட்ச எதிர்பார்ப்பு எல்லாம் சவூதி அரசு மீது இருப்பதாகும். குறிப்பாக இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களுக்கு சவூதி அரசின் அரசியல் பலம் ஒரு முக்கியமான அளவுகோலும் எடுத்துக்காட்டும் எங்களுடைய மன தைரியத்தை காக்கின்ற ஒரு செயற்பாடாகும்.

சவூதி அரேபியாவின் தேசிய தினம் கொண்டாடப்படுகின்ற இந்த நாளில் அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களாகிய நாம் பிரார்த்திப்போமென அச்செய்தியில் ஷெய்க் நூறுல்லாஹ் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT