Sunday, April 28, 2024
Home » தனது கிளை வலையமைப்பை விரிவுபடுத்தி நுகேகொடையின் தெல்கந்தவில் புதிய கிளையை திறந்துள்ள Gflock

தனது கிளை வலையமைப்பை விரிவுபடுத்தி நுகேகொடையின் தெல்கந்தவில் புதிய கிளையை திறந்துள்ள Gflock

by Rizwan Segu Mohideen
September 22, 2023 3:45 pm 0 comment

உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோர் மத்தியில் புகழ்பெற்ற தைத்த ஆடைகளின் முன்னணி வர்த்தக நாமமான Gflock, தனது கிளை வலையமைப்பை விரிவுபடுத்தியவாறு, கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி அதன் தலைவர் ரணில் வில்லத்தரகே தலைமையில், அதன் நான்காவது கிளையை நுகேகொடை, தெல்கந்தவில் திறந்து வைத்துள்ளது.

இதன் மூலம், பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட நவீன நாகரீகங்கள் மற்றும் பல்வேறு வடிவமைப்புகளுடன் கூடிய தைத்த ஆடைகளை வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப தெரிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. நவீன வடிவமைப்புகள் மற்றும் உயர்தர துணிகளிலிருந்து இந்த ஆடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்திய காட்சிக்கூட வர்த்தக தொழில்நுட்பத்துடன் இது அமைந்துள்ளது. மிகவும் தெளிவான வேறுபாட்டுடன் கூடிய, ஆக்கபூர்வமான தயாரிப்புகளை, மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் தெரிவு செய்து, கொள்வனவு செய்யும் பொருட்டு, நட்பு ரீதியான பணியாளர்களைக் கொண்ட விரிவான சேவையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

Gflock வர்த்தகநாமம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நுகர்வோரின் இதயங்களை வென்றுள்ளதன் மூலம் அவர்களுடன் நெருக்கமாக இருந்து வருகின்றது. தற்போது, ​​Gflock உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் முன்னணி வர்த்தகநாமமாக மாறியுள்ளது. குறிப்பாக அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் படைப்பாற்றல் மிக்க இளைஞர்களின் அனுபவங்களைப் பயன்படுத்தி, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் ஒரு உள்ளூர் வர்த்தகநாமமாக அது திகழ்கின்றது.

இவ்விழாவில் கருத்து வெளியிட்ட நிறுவனத்தின் தலைவர் ரணில் வில்லத்தரகே, “எதிர்வரும் சில வருடங்களில் மேலும் பரந்துபட்டவாறு, இலங்கையிலும் சர்வதேச அளவில் பிரபலமிக்க வர்த்தக நாமமாக இவ்வர்த்தக நாமத்தை உயர்த்துவேன்” என தெரிவித்தார்.

Gflock குழுவினர், வாடிக்கையாளர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை மதிக்கும் அதே வேளையில் தன்னலமற்ற தன்மையுடனும், ஒழுக்கம், உறுதிப்பாடு, விடாமுயற்சி, நேர்மையுடன் இவ்வணிகத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Gflock வலையமைப்பு கிளைகள் கொள்ளுப்பிட்டி, பெலவத்தை, நீர்கொழும்பு, தெல்கந்த ஆகிய இடங்களில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT