Sunday, May 12, 2024
Home » இலங்கையில் குளுக்கோமா சிகிச்சையை புரட்சிகரமாக்கும் ZEISS SLT இனை அறிமுகப்படுத்தும் DIMO Healthcare

இலங்கையில் குளுக்கோமா சிகிச்சையை புரட்சிகரமாக்கும் ZEISS SLT இனை அறிமுகப்படுத்தும் DIMO Healthcare

by Rizwan Segu Mohideen
July 13, 2023 3:16 pm 0 comment

இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, அதன் மதிப்புமிக்க Healthcare பிரிவான DIMO Healthcare மூலம் ZEISS Selective Laser Trabeculoplasty (SLT) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த அற்புதமான லேசர் சிகிச்சையானது குளுக்கோமா (கண் அழுத்த) நோயை முகாமைத்துவம் செய்வதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தனியான ஒரு செயன்முறையின் ஊடாக கண்ணின் உள் அழுத்தத்தை திறம்பட கட்டுப்படுத்தி, கிளைக்கோமா நோயாளிகளுக்கு, தினசரி மருந்துகளின் தேவையை கணிசமாகக் குறைக்கிறது.

மவுண்ட் லோட்டஸ் (Mount Lotus) மருத்துவமனையில் முதலாவது ZEISS SLT நிறுவப்பட்டமையானது, இலங்கையின் கண் மருத்துவத் துறையில் ஒரு குறிப்பிடும்படியான மைல்கல்லைக் குறிக்கிறது. ZEISS இற்கான அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் முகவர் எனும் வகையில், நாட்டின் சுகாதாரத் துறையில் மேம்பட்ட தீர்வுகளைக் கொண்டுவருவதில் DIMO Healthcare உறுதியாக உள்ளது. இந்த சிகிச்சை அணுகுமுறை இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு விசேடத்துவ நிறுவனத்தின் (National Institute for Health and Care Excellence – NICE) பரிந்துரைகளுடன் ஒத்துப்போகிறது. இது நாட்பட்ட திறந்த-கோண குளுக்கோமாவுடன் (open-angle glaucoma) புதிதாக கண்டறியப்பட்ட நபர்களுக்கான முதன்மை சிகிச்சையாக SLT இனை அடையாளம் காட்டுகிறது.

குளுக்கோமா, ஒரு பரவலான கண் நோயாகும். இது உலகளாவிய ரீதியிலான பிரச்சினையாக காணப்படுகிறது. ZEISS SLT ஆனது, குளுக்கோமா நோயாளிகள் மருந்தில் சார்ந்திருப்பதைக் குறைத்து, அவர்களுக்கு வசதியை ஏற்படுத்தி, சிகிச்சை மூலமான விளைவுகளை மேம்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்குகிறது. வழக்கமான குளுக்கோமா பிரச்சினை தொடர்பான பராமரிப்பிற்கு, நாளாந்தம் பல்வேறு மருந்துகள் உட்கொள்வது அவசியமாகின்றது. எவ்வாறாயினும் ZEISS SLT இன் அறிமுகமானது, நோயாளிகளுக்கு மிக நெறிப்படுத்தப்பட்ட மற்றும் திறனான சிகிச்சை அனுபவத்தை வழங்குகிறது.

புத்தாக்கமான ZEISS SLT தொழில்நுட்பமானது, பல்வேறு நன்மைகளை மாத்திரமல்லாது, கண் மருத்துவர்கள் மற்றும் குளுக்கோமா நிபுணர்களுக்கு மேம்பட்ட வசதியையும் வழங்குகிறது.

இலங்கையில் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் எனும் தனது அர்ப்பணிப்பிற்கு அமைய, DIMO Healthcare ஆனது ZEISS SLT தொழில்நுட்பத்தின் மருத்துவ அம்சங்கள் மற்றும் நன்மைகள் தொடர்பில் உள்ளூர் மருத்துவ நிபுணர்களுக்கு தெளிவூட்டுவதற்காக, ஒரு வெற்றிகரமான கருத்தரங்கை அண்மையில் நடத்தியிருந்தது. இக்கருத்தரங்கானது, அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும், மேம்பட்ட வகையிலான நோயாளிகளின் பராமரிப்பைப் மேற்கொள்வதிலான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் ஒரு தளமாக செயற்பட்டது.

DIMO Healthcare பிரிவின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான பிரியந்த திஸாநாயக்க இது தொடர்பாக தனது கருத்தைத் தெரிவிக்கையில், “எமது மதிப்பிற்குரிய பங்காளிகளுடன் இணைந்து அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் DIMO Healthcare மிகவும் பெருமை கொள்கிறது. ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்புவதில் தீவிரமாக பங்களிக்கும் அதே வேளையில், எமது சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பது எனும் எமது நோக்கத்திற்கு அமைவான உந்துதலுடன் செயற்படுகிறோம்” என்றார்.

VISULAS green தளத்தில் ZEISS SLT இன் அறிமுகமானது, குளுக்கோமா லேசர் சிகிச்சையின் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிடும்படியான மைல்கல்லைக் குறிக்கிறது. பல தசாப்தங்களாக நிபுணத்துவம் பெற்ற உலகளாவிய புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ZEISS ஆனது, குளுக்கோமாவால் ஏற்படுகின்ற, வளர்ந்து வரும் சவாலை எதிர்கொள்ள இந்த அதிநவீன தீர்வை உருவாக்கியுள்ளது.

அந்த வகையில், வாழ்க்கையை மாற்றுகின்றதும் இலங்கையிலுள்ள சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கின்றதுமான புதிய தொழில்நுட்பங்களை DIMO Healthcare தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT