போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளது; அடுத்த கப்பல் ஜூன் 22 வருகிறது

ஒக்டேன் 95 ரக பெற்றோல் உள்ளிட்ட  எந்த பெற்றோலியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC எரிபொருள் நிறுவனங்களில் போதிய கையிருப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெற்றோல் ஒக்டேன் 95 இனது நாளாந்த தேவை சுமார் 80-100 மெட்ரிக் தொன் எனவும், எரிபொருள் நிலையங்களில் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்படும் அனைத்து எரிபொருள் கொள்வனவு கோரிக்கைகளுக்கும் விநியோகத்தை மேற்கொள் முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும் ஞாயிற்றுக்கிழமைகளில் விநியோகம் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் மெட்ரிக் தொன் 9,000 உடனான அடுத்த எரிபொருள் கப்பல் எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...