சமூக பொருளாதார முன்னேற்றத்தின் இயந்திரங்களாக காஷ்மீர் இளைஞர்கள்

சமூக பொருளாதார முன்னேற்றத்தின் இயந்திரங்களாக இளைஞர்களை மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. 

இளைஞர்கள் வாழ்வாதாரத்தை இலகுவாக அடைந்து கொள்ளவும், அதற்கான கல்வியைப் பெற்றுக்கொள்ளவும், திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் தேவையான பல திட்டங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு அவர்களுக்கு நிதியுதவியுடன் தொழில் ஆலோசனைகள் வழங்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் நிமித்தம், 'அரசு இளைஞர்களுடன் இணைந்து செயற்படல்' என்ற வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பிராந்திய இளைஞர்களை உற்பத்தி துறையில் நூறு வீதம் ஈடுபடுத்துவதை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இத்திட்டங்களின் ஊடாக  இப்பிராந்தியத்தின் செழுமைக்கென அவர்களது பங்களிப்பு முழுமையாகப் பெற்றுக்கொள்ளப்படும் என்று அரச அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, ஜம்மு காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுயதொழில் வேலை வாய்ப்புத் திட்டங்களை இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. அரசாங்க திணைக்களங்களுக்கும் ஆட்சேர்ப்பின் ஊடாக இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். சிறந்த தொழில் வாய்ப்புக்களின் நிமித்தம்  நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்கள் சென்று வரக்கூடியவர்களாக உள்ளனர். பரஸ்பர ஒத்துழைப்பின் ஊடாக கைத்தொழில் பாதையில் ஜம்மு காஷ்மீர் பிரவேசித்துள்ளது என்று ஏ.என்.ஐ குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...