மே தினம், நோன்புப் பெருநாள் ஆகிய தினங்களில் மின்வெட்டு கிடையாது

- மே 02, 04 மின்வெட்டு நேரங்கள் அறிவிப்பு

எதிர்வரும் மே தினமான மே 01ஆம் திகதி மற்றும் நோன்புப் பெருநாள் தினம் என உத்தேசிக்கப்பட்டுள்ள மே 03ஆம் திகதி ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, நாளைய தினம் (30) மின்வெட்டு நேர அட்டவணை...

இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டு:

ABCDEFGHIJKL | PQRSTUVW :
 - மு.ப. 9.00 - பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
 - பி.ப. 5.00 - இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

CC :
 - மு.ப. 6.00 - மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்

அத்துடன் மே 02 மற்றும் மே 04 ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான நேர அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)

PDF File: 

Add new comment

Or log in with...