கடும் மழை; கடும் காற்று தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மழை; கடும் காற்று தொடர்பில் எச்சரிக்கை!-Showery Weather-Strong Gusty Wind Condition Over the South-Western Part of the Country

- நாளை பி.ப. 2.00 வரை நிலைமை தொடரும் வாய்ப்பு

நாட்டில் நிலவும் தென் மேல் பகுதியில் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான நிலை தொடரும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஒரு சில இடங்களில் குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களில்
கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடும் காற்று
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

PDF File: