3 அமைச்சுகளின் கடமைகளையும் பிரதமர் பொறுப்பேற்பு

நகர அபிவிருத்தி மற்றும்‌ வீடமைப்பு அமைச்சில்...

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இன்று (17) தனது 03 அமைச்சுகளின் கடமைகளையும் பொறுப்பேற்றார்.

மத வழிபாடுகளுடன் இடம்பெற்ற பிரதமரின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புத்தசாசன, சமய மற்றும்‌ கலாசார அலுவல்கள்‌ அமைச்சில்...

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ  நிதிஅமைச்சு‌, புத்தசாசன, சமய மற்றும்‌ கலாசார அலுவல்கள்‌ அமைச்சு‌ நகர அபிவிருத்தி மற்றும்‌ வீடமைப்பு அமைச்சு‌ஆகிய 03 அமைச்சுகளுக்கு பொறுப்பாகவுள்ளார்.

குறித்த 03 அமைச்சுகளிலும் தனது கடமைகளை அவர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நிதி அமைச்சில்...


Add new comment

Or log in with...