தேர்தலையிட்டு மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

- மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை

எதிர்வரும் 05ஆம், 06ஆம் திகதிகளில் நாடு பூராகவும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு, மதுவரித் திணைக்கள ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் காரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்திற்கு அமைய நடந்துகொள்ளாத மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும், அவர்களின் அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தவும், அவர்களுக்கு எதிராக ‘தொழில் குற்றம்’ எனும் குற்றச்சாட்டை பதிவு செய்யவும், நாடு பூராகவும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளை 1913 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமாக மதுவரித் திணைக்கள தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட செயற்பாட்டு நிலையத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...