நிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணின் சடலம் (UPDATE) | தினகரன்

நிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணின் சடலம் (UPDATE)

நிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம்-Woman's Body Found at Nintavur Shore

நிந்தவூர் கடற்கரையில் இன்று மாலை கரையொதுங்கிய சடலம், நிந்தவூர் 02ம் பிரிவைச் சேர்ந்த சல்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் 03 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

நிந்தவூர் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதிங்கியுள்ளது.

இன்று (29) மாலை கரையொதுங்கிய இச்சடலமானது சுமார் 53 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரினது என தெரிவிக்கப்படுகின்றது.

நிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம்-Woman's Body Found at Nintavur Shore

இந்நிலையில் இந்த சடலம் தற்போதைக்கு யாருடையது என்பதனை அடையாளம் காண முடியாதுள்ளதுடன், சடலமானது கரையொதிங்கிய இடத்திலேயே காணப்பட்டது.

இதேவேளை குறித்த பெண்ணை அடையாளம் காண இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக சம்மாந்துறைப் பொலிஸாரிற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன்,  இது பற்றிய மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் ராபி)


Add new comment

Or log in with...