நீதிபதி பத்மினி ரணவக CCDயில் சுமார் 3 மணி நேர வாக்குமூலம்

நீதிபதி பத்மினி ரணவக CCDயில் சுமார் 3 மணி நேர வாக்குமூலம்-Nearly 3Hr Statement From Rtd High Court Judge Padmini Ranawaka

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக, கொழும்பு குற்றப் பிரிவில் (CCD) சுமார் 3 மணி நேர வாக்குமூல பதவின் பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல்கள் குறித்து அவரிடம், கொழும்பு குற்றப் பிரிவு வாக்குமூலம் பெற்றிருந்தது.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நீதிபதிகளிடம் வாக்குமூலம் பெறுமாறு, கொழும்பு குற்றப் பிரிவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய, நேற்று (19) பிற்பகல் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம், கொழும்பு குற்றப் பிரிவினர் சுமார் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்திருந்தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் நீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கிஹான் பிலபிட்டி மற்றும் தம்மிக ஹேமபால ஆகிய நீதிபதிகள் மூவரிடம் உடனடியாக வாக்குமூலம் பெறுமாறு கடந்த வியாழக்கிழமை (16) ஆம் திகதி கொழும்பு குற்றப் பிரிவு பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபால நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...