கோத்தாபய ஜனாதிபதி ஆணைக்குழுவில்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (09) காலை ஆஜரானார்.
 
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சொத்துகளை தவறான முறையில் பயன்படுத்தியமை, மற்றும் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் இருவரை, தனது சகோதரரும் முன்னாள் பொருளாதாக அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷவின் அமெரிக்காவிலுள்ள வீட்டிற்கு வேலைக்கு அமர்த்தியமை தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு சமூகமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, குறித்த விசாரணை தொடர்பில் கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி அவர் அழைக்கப்பட்டிருந்தபோதிலும், வேறொரு தினத்தில் ஆஜராவதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, இலங்கை விமானசேவைக்குச் சொந்தமான விமானங்களை தவறான விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்ய, பராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

Add new comment

Or log in with...