இலங்கையில், உலகின் மிகப் பெரிய மாணிக்கம்

உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மாணிக்கத்திற்கு புகழ்பெற்ற இரத்தினபுரி நகரில் அகழ்வொன்றிலிருந்து இந்த நீல மாணிக்கம் பெறப்பட்டதாக கொழும்பிலுள்ள மாணிக்க ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
 
அத்துடன் குறித்த மாணிக்கம், 1404.49 கரட் நிறையைக் கொண்டதென அந்நிலையம் தெரிவித்துள்ளதோடு, இதுவே இதுவரை அறியப்பட்ட நீல மாணிக்கங்களில் மிகப் பெரியது என உறுதிப்படுத்தப்படுத்தியுள்ளது.
 
குறித்த மாணிக்கம் சுமார் 100 மில்லியன் டொலர் பெறுமதியானது என, பெயர் குறிப்பிடாத, இலங்கையின் பிரபல மாணிக்க வர்த்தகர்களில் ஒருவரான அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 
 
ஆதாமின் நட்சத்திரம் என, அதன் அவரால் பெயர் சூட்டப்பட்டுள்ள குறித்த மாணிக்கத்தை, சுமார் 175 மில்லியன் டொலர் வரை ஏலத்தில் விற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையின் மதிப்பீட்டின்படி, மாணிக்க வர்த்தகத்தின் மூலம், வருடமொன்றுக்கு 103 மில்லியன் டொலர் வருமானத்தை இலங்கை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9098","attributes":{"alt":"","class":"media-image","height":"351","style":"width: 650px; height: 366px;","typeof":"foaf:Image","width":"624"}}]]
 
பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி டயானாவின் திருமண மோதிரத்தில், இலங்கையின் நீலமாணிக்கமே பதிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த மோதிரம், தற்போது அவரது மகன் வில்லியம் மணந்துள்ள கெதரின் மிடில்டனுக்கு திருமண மோதிரமாக அணிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...