நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு அமைச்சரவைக்கு | தினகரன்


நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு அமைச்சரவைக்கு

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அனுமதியைக் கோரும் விசேட அமைச்சரவை பத்திரம் நாளை (18) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
அலறிமாளிகையில் இன்று (17) இடம்பெற்ற, இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
 
தேர்தல் விதிமுறை சீர்திருத்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றையும், தமது தனிப்பட்ட யோசனையாக நாளைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
 
கடந்த வாரம் இடம்பெற்ற மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, தான் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அவரது தேகத்தின் முன் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...