225 இளைஞர்களை தெரிவுசெய்ய 657 பேர் போட்டி

இளைஞர் பாராளுமன்றத்திற்கான 225 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் தற்போது (07) இடம்பெற்று வருகின்றது.
 
நாடு முழுவதிலுமுள்ள 334 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற்று வரும் இத்தேர்தலில் சுமார் 5 இலட்சம் இளைஞர், யுவதிகள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு, 657 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6745","attributes":{"alt":"","class":"media-image","height":"450","style":"width: 650px; height: 487px;","typeof":"foaf:Image","width":"600"}}]]
           கம்பஹாவில்
 
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கபே அமைப்பு ஈடுபட்டுள்ளது.
 
வாக்களிப்பு நிலையங்களாக காணப்பட்ட  பிரதேச செயலகங்களில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, பிரதேச ரீதியான முடிவுகள் மாவட்ட தேர்தல் நிலையமாகக் காணப்படும்  கச்சேரிக்கு  அறிவிக்கப்படும். 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6746","attributes":{"alt":"","class":"media-image","height":"600","style":"width: 650px; height: 488px;","typeof":"foaf:Image","width":"800"}}]]
           மட்டக்களப்பில்
 
அதன் அடிப்படையில் தொகுதியில் வெற்றிபெற்று தெரிவு செய்யப்ட்டுள்ள வெற்றியாளர்களின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...