நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல்

நிந்தவூருக்கான ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (26) இடம்பெற்றது.
 
10மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த ஆயுர்வேத வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிமின் முயற்சியின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
நிந்தவூர் பிர்தௌஸ் பள்ளிவாசல் அருகாமையில் உள்ள பகுதியிலே இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதியமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண ஆயுர்வேத ஆணையாளர் திருமதி எஸ்.சிறிதரன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் மத்தியநிலையத்தின் பணிப்பாளர்  ஏ.அலாவுதீன், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் உள்ளிட்ட  அரசியல் பிரமுகர்கள், வைத்தியர்கள், சுகாதாரசேவை உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
இதேவேளை அடிக்கல் நடப்பட்ட வெளவ்வாலோடைப் பிரதேசத்தில் பிரதியமைச்சரினால் பொது விளையாட்டு மைதானம் ஓன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருவகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
(சுலைமான் றாபி)
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"4995","attributes":{"alt":"","class":"media-image","height":"436","typeof":"foaf:Image","width":"674"}}]]
 
பிரதியமைச்சர் பைசால் காசிம்
 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"4996","attributes":{"alt":"","class":"media-image","height":"584","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 674px; height: 410px;","typeof":"foaf:Image","width":"960"}}]]
 
கிழக்கு மாகாண ஆயுர்வேத ஆணையாளர் திருமதி எஸ். சிறிதரன்

Add new comment

Or log in with...