160
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்- பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் தென்மராட்சிலுள்ள இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தாவளை இயற்றாலை விளையாட்டுக் கழகம் மற்றும் வரணி வடக்கு யாழ். ஒளி விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கே இவ்வாறு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களிடம் மேற்படி உதவித்திட்டத்தை கையளித்திருந்தார்.
சாவகச்சேரி விசேட நிருபர்