தங்கத்தின் விலையில் நேற்று சிறிய வீழ்ச்சி ஏற்பட்டது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நேற்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 650,240.18 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இது சிறு வீழ்ச்சியையே காட்டுகிறது.
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 646,540 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,787 ரூபாவாக நேற்று பதிவானது. 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166,294 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை,22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 152,436 ரூபாவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,055 ரூபாவாக உள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,188 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 145,507 ரூபாவாகவும் நேற்று பதிவாகியிருந்தது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றமுறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.