உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கடமை தவறியதாக பொலிஸ் சார்ஜெண்ட் பணி நீக்கம்

கட்டான பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் 12 குற்றச்சாட்டுகளின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வுப் பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தபோது, தனக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்யத் தவறியதற்காக விசாரணைக்கு அவர் உட்படுத்தப்பட்டிருந்தார்.

அதற்கமைய இடம்பெற்ற ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி, நடத்தை விதிகளை மீறியதாக 12 குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸ் சார்ஜெண்ட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட அவரை, பணி நீக்கம் செய்ய பொலிஸ் மாஅதிபரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதன்கிழமை (14)  முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொலிஸ் சார்ஜெண்ட் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...