கலவரத்தை தூண்டியதாக ஐ.ம.ச அமைப்பாளர் கெஸ்பேவயில் கைது

கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற கலவரச் சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கயான் டி மெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பொலிஸார் விடுத்த அறிவித்தலின் பிரகாரம், சந்தேகநபர் நேற்று (08) காலை சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பின்னர் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

இதேவேளை, காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றுமொருவர் கொம்பனி தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக அறிய வருகிறது.

 


Add new comment

Or log in with...