உத்தர பிரதேச பொருளாதார மேம்பாடு தொடர்பில் கூட்டம்

உத்தர பிரதேச பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டொலருக்கு முன்னேற்றும் இலக்கை நிறைவற்றும் மற்றொரு படியாக உத்தர பிரதேச அரசின் உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தக மேம்பாட்டு திணைக்களம் மற்றும் டிலொயிட் இந்தியா இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

மாநிலத்தால் முன்னெடுக்கப்படும் முதலீட்டளர்களை கவர்வதற்கான யோகி அரசினால் அமைக்கப்பட்டுள்ள கொள்கைகள் தொடர்பில் இந்த இரு நிறுவனங்களும் அவதானம் செலுத்தின.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டொலருக்கு உத்தர பிரதேச உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழித்திட்டத்தை தயாரிப்பதற்கு ஜப்பானிய அலோசனை டிலொயிட் டச் டொமட்சு உடன் ஒப்பந்தம் ஒன்றில் யோகி அதித்யனாத் அரசு கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...