ஜனாதிபதியின் இல்லத்துக்கு தீ வைத்தோரை தேடும் CID

ஜனாதிபதியின் பிரத்தியேக வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த, தீ வைத்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸ் தலைமையகம் நாடியுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது குழப்பம் விளைவித்தவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலக்கம் 119, ஐந்தாவது ஒழுங்கை, கொழும்பு 03 இல் அமைந்துள்ள பிரத்தியேக வீட்டுக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி பிரவேசித்து,  சேதப்படுத்தி,தீயிட்டு, சொத்துக்களை அழித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி இச் சம்பவம் தொடர்பாக பெற்றுக் கொள்ளப்பட்ட காணொளிகள் மூலம் இந்த சேதத்தை ஏற்படுத்திய நபர்களை அடையாளம் காண வேண்டியது அவசியமாகவுள்ளது.

இதன் காரணமாக சரியான குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அவர்களின் 13 பேரின் புகைப்படங்களை ஊடகங்களுக்கு பிரசுரிப்பதற்காக பொலிஸ்திணைக்களம் வழங்கியுள்ளது.

இங்கு படங்களில் காணப்படும் இந்நபர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் வட்ஸ் அப் மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ அழைப்பை ஏற்படுத்தி அறியத் தருமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

தொலைபேசி இலக்கங்கள் :

071- 8594950
071 - 8594929
011 - 2422176


Add new comment

Or log in with...