நானுஓயா - கண்டி ரயில் சேவையில் பெட்டிகளை அதிகரிக்கக் கோரிக்கை

நானுஓயாவிலிருந்து கண்டியை நோக்கி காலை வரும் ரயிலில் பெட்டிகளை அதிகரிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

இந்த புகையிரதம் காலை 6.35மணிக்கு நாவலப்பிட்டிக்கும் 7.10க்கு கம்பளைக்கும் வருகின்றது. இந்த புகையிரதத்தில் தான் அரசாங்க, தனியார்துறை உத்தியோகஸ்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நோயாளர்கள் என பல பிரிவுகளை சேர்ந்தவர்கள் பிரயாணம் செய்கின்றனர்.இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத மக்கள் குறைந்த செலவிலான பிரயாணங்களை பயண்படுத்த தொடங்கியுள்ளதால் ரயிலில் பயணிப்போரின் தொகையும் பெருமளவு அதிகரித்துள்ளது. 

ஆனால் இன்றும் குறைந்தளவு எண்ணிக்கையிலான பெட்டிகளிலே பிரயாணிகள் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இது சம்பந்தமாக புதிய போக்குவரத்து அமைச்சர் நடவடிக்கை எடுத்து அதிகளவு பெட்டிகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக நாவலப்பிட்டியிலிருந்து கண்டிக்கு பஸ் வண்டியில் பிரயாணச்சீட்டு 178 ரூபாவும் கம்பளையிலிருந்து கண்டிக்கு 116 ரூபாவும் கொடுக்க வேண்டியிலுள்ளது.ஆனால் புகையிரதத்தில் நாவலப்பிட்டியிலிருந்து கண்டிக்கு 45 ரூபாவும் கம்பளையிருந்து கண்டிக்கு 25 ரூபாவாக காணப்படுகிறது.இதனால் அதிகமானோர் ரயிலில் பிரயாணம் செய்ய விரும்புகின்றனர்.  ஆகவே இது சம்பந்தமாக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்

  


Add new comment

Or log in with...