அல் கொய்தா சிரேஷ்ட தலைவர் அமெரிக்கத் தாக்குதலில் பலி

அல் கொய்தா அமைப்புடன் தொடர்புபட்ட மூத்த தலைவர் ஒருவரை இலக்கு வைத்து சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட ஹுராஸ் அல் தீன் அமைப்பின் மூத்த தலைவரான அபூ ஹம்சா அல் யெமனி மோட்டார் சைக்கிளில் தனியாக பயணித்துக் கொண்டிருக்கும்போது அவரை இலக்கு வைத்தே கடந்த திங்கட்கிழமை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது இரு ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஆரம்பக்கட்ட மீளாய்வில் தெரியவந்ததாகவும் அது குறிப்பிட்டது.

“இந்த மூத்த தலைவரை அகற்றி இருப்பது அமெரிக்க மக்கள், எமது கூட்டாளிகள் மற்றும் உலகெங்கும் உள்ள அப்பாவிகள் மீதான அல் கொய்தாவின் தாக்குதல் திறனை முறியடிக்கும்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...