ரஷ்யா, உக்ரைனிய போர்: விடோடோ அமைதி பேச்சு

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ ரஷ்யா, உக்ரைன் தலைவர்களைச் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

ஜி20 அமைப்பின் தலைவரான அவர் நேற்று ஜெர்மனிக்குப் புறப்பட்டுள்ளார். அவர் அங்கு நடைபெறும் ஜி7 சந்திப்பில் கலந்துகொள்வார். பின், அவர் உக்ரைன் சென்று ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியைச் சந்திப்பார்.

அமைதிப் பேச்சை ஆரம்பிக்குமாறு செலென்ஸ்கியைக் கேட்டுக்கொள்ளப்போவதாக ஜக்கர்த்தாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜனாதிபதி விடோடோ கூறினார். போர் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து மொஸ்கோ சென்று ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். உடனடியாகச் சண்டையை நிறுத்துமாறு புட்டினிடம் கேட்டுக்கொள்ளப்போவதாக விடோடோ குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...