புலமையாளர்களின் பார்வையில் மெய்வெளியின் 'காத்தாயி காதை'

லண்டனில் நடைபெற்ற மலையக இலக்கிய மாநாட்டில் அரங்கேறிய மெய்வெளியின் 'காத்தாயி காதை' நேரடி நாடகமாக அமையாமல், stylised play ஆக மிக நேர்த்தியாக நிகழ்த்தப்பட்டது. சாம் பிரதீபனின் செறிவான எழுத்துரு நாடக வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. நடிப்பில் நன்கு பண்பட்ட ரஜித்தா காத்தாயி பாத்திரத்தை

ஏற்று பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தார். அரங்கில் பலர் கண்கலங்கி நின்றனர். உரைகளாகத் தொடர்ந்து கொண்டிருந்த மாநாட்டு நிகழ்வில் பொருத்தமான வேளையில் 'காத்தாயி காதை' குறுக்கீடு செய்து அவையோரின் பெருங் கவனத்தை ஈர்த்தது. மாநாட்டு நிகழ்வின் மகுடமாக 'காத்தாயி காதை' நிகழ்வு அமைந்தது. ரஜித்தா காத்தாயியாகவே மாறிப் போயிருந்தார்.

சாம் பிரதீபனுடன் ரஜித்தா, சுஜித், காண்டீபன், அலன், றித்திக், அனுக்ஷன்,அஞ்சனா, ஷாருகா, றாஜீ, மோதிலா மற்றும் ஏனைய நாடகக்குழுவினருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

புதியவன் இராசையா: - வடக்கு, கிழக்கில் ஆயுதப் போராட்டம் நிலவிய காலத்தில் பதுளையைச் சேர்ந்த காத்தாயியும் அந்த அலையினுள் அகப்பட்ட ஒரு அப்பாவி சீவன். 1994 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட காத்தாயி புற்றுநோயினாலே வெலிக்கடை சிறையிலே துடித்துக் கொண்டிருந்தார். 2014 இல் புற்றுநோய்க்கு பலியானார்.

மலையக இலக்கிய மாநாடு மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. சாம் பிரதீபன் மற்றும் பிறேமலதா சாம் பிரதீபன் இணைந்து வழங்கிய நாடக ஆற்றுகை வந்திருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. பிறேமலதா காத்தாயி ஆகத் தோன்றி நடித்த நடிப்பு காத்தாயியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

 

மாதவி சிவலீலன்:

1994ஆம் ஆண்டு மலையகத்தில் தன்னைத் தேடி வந்த போராளி இளைஞனுக்கு அடைக்கலம் கொடுத்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்ட அவர் பத்தொன்பது வருடங்கள் அச்சிறையில் நோய்களோடு இருந்து அங்கேயே மரணித்துப் போனார். அவருக்காக எவருமே குரல் கொடுக்கவும் இல்லை. அச்சம் காரணமாக அவரது புகைப்படங்களையும் உறவினர்கள் எரித்து விட்டனர். இன்று அவரைப் பார்த்தவர்கள் பழகியவர்கள் நினைவிலேயே அவரது உருவம் நினைவு கூரப்படுகின்றது.

அவரின் வாழ்க்கை மறக்கடிக்கப்பட்ட சூழலில் லண்டனில் அவருக்கு இவர்களால் உயிர் கொடுக்கப்பட்டு அவருக்கு நடந்த அநீதி உலகறியச் செய்யப்பட்டுள்ளது. பேசாப் பொருளைப் பேச வைத்த விம்பம் குழுவினர் வரலாற்றில் நின்று விட்டனர்.

 

பூங்கோதை:

11.6.2022 அன்று லண்டன் விம்பம் அமைப்பின் ஆதரவுடன் மலையக இலக்கிய மாநாடு மிகச் சிறப்பாக ஒன்று கூடியது. பதுளை லுணுகளையில் அடாவத்தைத் தோட்டத்தைச் சேர்ந்த காத்தாயி முத்துசாமி என்ற தோட்டத் தொழிலாளிப் பெண்தான் இந்த நாடகத்தின் கதாநாயகி. 1994 ஆம் ஆண்டு தமிழ் தீவிரவாத இயக்க இளைஞர் ஒருவர் மட்டக்களப்பிலிருந்து பதுளையூடாகத் தப்பிச் சென்ற போது, அவருக்கு தனது லயத்தில் தங்குமிடம், உணவு வழங்கியிருந்தார் என்ற குற்றச் சாட்டில் பொலிசாரால் கைதாகியிருந்தார். தனது நாற்பத்தொன்பது வயதில் சிறையில் அடைக்கப்பட்டு, 19 ஆண்டுகள் சிறையிலேயே துன்பங்களுடன் வாழ்ந்து தனது 68 வயதில் அவர் காலமானார். மலையக அரசியல்த் தலைவர்களோ, மனித உரிமை இயங்கங்களோ காத்தாயியைப் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை என்பது துயரத்தின் உச்சம். வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் அரசினால் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னரும் காத்தாயி மூன்றரை ஆண்டுகள் சிறை வாசம்இருந்தார். நாதியற்ற பெண்ணாகவே இவர் வாழ்ந்து மறைந்தார். இப்பெண்ணை நினைவு கூரும் முகமாக 'மெய்வெளி நாடகக் குழு' காத்தாயி காதையைமேடை ஏற்றியது.

நவரட்ணராணி:

-மெய்வெளி நாடகக் குழுமத்தினரால், சாம் பிரதீபனின் மெச்சத்தகு எழுத்துருவோடும் நெறியாள்கையோடும் கச்சிதமாக மேடை ஏற்றப்பட்டது 'காத்தாயி காதை' நாடகம். சாம்பிரதீபனின் கம்பீரக் குரலோடு ஆரம்பமாகியது மேடை அரங்கு. சாமின் கர்ஜனை, ஒரு கணம் அரங்கையே விதிர் விதிர்க்க வைத்தது. உண்மையில் நான் அரண்டே விட்டேன்.

காத்தாயியாக , உருக, உருகத் தன் நடிப்பாற்றலைப் பிழிந்து , அந்த அபலைப் பெண்ணின் ஈனக் குரலையும் கதறலையும் எழுத்துரு அற்புதமாய் சுவீகரித்துப் பிரதிபலித்தார் ரெஜித்தா சாம் அவர்கள். அடடா..அதி அற்புதம். மெய்சிலிர்த்துக் கண் பனித்தனர் சபையோர்.

போராளியாக வந்தவரின் தீரமான நடிப்பும்., அரச படைகளாக உருமாறிய அச்சின்ன விடலைகளின் திடமும், கம்பீரமும் சொல்லில் அடங்கா. மேலாக , ஒலி அமைப்பை திறம்பட இயக்கிய சிறுமிகள் சிறப்பாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

காட்டிக் கொடுக்கப்பட்டு, அநியாயமாக, மானுடம் மறந்த , மறுத்த ஆதிக்கக் காட்டுமிரண்டி வெறியர்களால் பொசுக்கப்பட்ட பேதையின் வாழ்வையும் , கொடுமையான மரணத்தையும் சொற்ப நேரத்தில் அபாரமாய் கச்சிதமாய் சித்தரிக்க “ சாம்பிரதீபனால்” மட்டுமே முடிந்தது, முடியும்.

பேராசிரியர் மு.நித்தியானந்தன்:


Add new comment

Or log in with...