இவ்வார 'அனுபவம் பேசியதே' நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் லத்தீப் பாரூக் பங்கேற்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில், புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மனம் திறந்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் 'அனுபவம் பேசியதே' என்ற சிறப்பு நிகழ்ச்சி கொழும்பு, மருதானை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பும் கலந்துரையாடலுமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்ச்சியில், சிரேஷ்ட ஊடகவியலாளரின் சுவாரஷ்யமான அனுபவங்களைப் கேட்டுப் பயனடைவதோடு, கேள்வி - பதில் நிகழ்விலும் கலந்து கொள்ளலாம்.

மாதமொரு முறை நடாத்தத் திட்டமிட்டுள்ள இந்நிகழ்ச்சியின், முதலாவது விருந்தினராக நாட்டின் மூத்த ஊடகவியலாளர் லத்தீப் பாரூக் தனது தேசிய மற்றும் சர்வதேச ஊடக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பி. இப்திகார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், விரும்பியவர்கள் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர். (எம்.எஸ்.எம். ஸாகிர்)


Add new comment

Or log in with...