ஒமிக்ரோனின் உப பிரிவுகள் பரவும் வேகம் அதிகரிப்பு

இரு உப பிரிவுகளாக பரவுவதாக எச்சரிக்கை

இலங்கையில் ஒமிக்ரோன் பிறழ்வானது வேகமாகப் பரவும் கொவிட் -19 வகையாக மாறியுள்ளது.

இலங்கையில் தற்போது ஒமிக்ரோன் வகையின் இரண்டு உப பிரிவுகள் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு கொவிட் -19 க்கான 78 மாதிரிகளைப் பரிசோதித்தபோது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 75 ஒமிக்ரோன் பிறழ்வுகளாகவும் உள்ளது.

78 மாதிரிகளில் 3 மாதிரிகளில் மாத்திரமே டெல்டா பிறழ்வு உள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். குறித்த மாதிரிகள் இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் பெறப்பட்டுள்ளன.

ஒமிக்ரோன் BA.1 உப பிரிவானது கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, கட்டுகொட, கொஸ்கம, மடபாத, பாதுக்க, பரகடுவ மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய இடங்களிலிருந்து பதிவாகியுள்ளது. அவிசாவளை, பதுளை, கொழும்பு, காலி, கொலன்னாவ, கல்கிசை மற்றும் நுகேகொட ஆகிய இடங்களில் ஒமிக்ரோனின் BA.2 உப பிரிவுகள் பதிவாகியுள்ளன.


Add new comment

Or log in with...