இந்தியாவிலிருந்து ஒருவர் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட 75 Omicron தொற்றாளர்கள்

இந்தியாவிலிருந்து ஒருவர் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட 75 Omicron தொற்றாளர்கள்-75 More Omicron Variant Cases-3 Delta Variant Cases Identified

நாட்டில் மேலும் 75 கொவிட்-19 ஒமிக்ரோன் திரிபைக் கொண்ட வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொவிட் திரிபு ஆய்வுகளின் அடிப்படையில் 78 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து 75 புதிய Omicron தொற்றாளர்களும் 03 புதிய Delta தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை, கல உயிரியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் சமீபத்திய SARS-CoV-2 திரிபு அறிக்கையில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 78 மாதிரிகளும், இம்மாதம் (ஜனவரி) முதல் 3 வாரங்களில் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு, கல உயிரியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களில் அடையாளம் காணப்பட்ட திரிபுகளும், இரண்டு முக்கிய ஒமிக்ரோன் வரிசைகளான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றின் கலவையாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Omicron அடையாளம் காணப்பட்ட இடங்கள்
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதிய Omicron தொற்றாளர்களில், 56 மாதிரிகள் BA.1 எனவும், அவை கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, கட்டுகொட, கொஸ்கம, மடபாத, பாதுக்கை, பரக்குடாவ, வெல்லம்பிட்டி ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

12 மாதிரிகள் BA.2 எனவும், அவை, அவிசாவளை, பதுளை, கொழும்பு, காலி, கொன்னாவல, கல்கிஸ்ஸை, நுகேகொடை மற்றும் இந்தியாவிலிருந்து வந்த ஒருவரிடமிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

7 மாதிரிகள் B.1.1.529 எனவும், அவை அங்கொடை, கொழும்பு, ருவன்வெல்ல, கல்கிஸ்ஸை, நுகேகொடை, பாதுக்கை ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Delta அடையாளம் காணப்பட்ட இடங்கள்
பின்வரும் இடங்களில் 3 வெவ்வேறு Delta உப பிறழ்வைக் கொண்ட மாதிரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. AY.98 பிறழ்வை (இலங்கை டெல்டா உப பரம்பரை) கொண்ட தொற்றாளர் ஒருவர் தலங்கமவில் கண்டறியப்பட்டுள்ளார். AY.104 பிறழ்வைக் கொண்ட தொற்றாளர் ஒருவர் கடுவெலவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். B.1.617.2 பிறழ்வைக் கொண்ட ஒருவர் வெல்லம்பிட்டியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது வரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களில், 8% ஆனோர் BA.2 பிறழ்வைக் கொண்டவர்களாவர், இது 'ஆர்வத்தின் பிறழ்வு' என பிரிட்டனின் (UK) சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ளது.

இது தவிர, இலங்கைக்குள் அடையாளம் காணப்பட்ட ஏனைய பிறழ்வு வகைகள் B.1.411: இலங்கை திரிபு, B.1.1.25, B.1.258, B.1.428, B.4, B.4.7, B.1.1.365, B.1.525, B.1 , B.1.1

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட பல்வேறு திரிபுகளின் தோற்றம் மற்றும் அவற்றின் இடம்பெயர்வு வருமாறு:

Figure 1: Change in the SARS-CoV-2 variants in Sri Lanka over time. The graph shows changes in the different variants.

Figure 2: Locations of samples sequenced during the past week (4th week of December and 1st week of January)

Phylogenetic tree of Omicron variants found in Sri Lanka

Locations where Omicron has been found in Sri Lanka so far

Figure 3: Prevalence of Omicron in different countries in the world based on sequencing data (The current round of SL data does not appear yet in this website)

Figure 4: Sequencing of viruses carried out in Sri Lanka so far.

Figure 5: Phylogenetic tree of all SARS-CoV-2 sequences identified in Sri Lanka so far.


Add new comment

Or log in with...