சகல வீடுகளுக்கும் ஆயுர்வேத மருந்து

அடுத்த வாரம் முதல் விநியோகம்

கொரோனாவிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் உள்ளூர் மருந்துப் பெட்டி விநியோகிக்கும் திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட வுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்கு விப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத மருத்துவ மனைகள் அபிவிருத்தி, சமூக ஆரோக்கிய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

இம்மருந்துப் பெட்டியில் ஆயுர் வேத மருத்துவ மனைகளில் கொவிட் வைரஸ் சிகிச்சைக்காக தற்போது வழங்கப்படும் நோய் தடுப்பு பானம், நோய் தடுப்பு பொடி ஆகியவை உள்ளடங்கியிருக்கும்.

நோய் பரவிய பகுதிகளை இலக்கு வைத்து இந்தப் பெட்டி முதலில் விநியோகிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.