சீனிக்கு தட்டுப்பாடா? மறுக்கிறார் அமைச்சர்

03 மாதத்திற்கான சீனி கையிருப்பில்!

நாட்டில் சீனிக்கு பற்றாக்குறை ஏற்பட எந்தக் காரணமும் இல்லையென்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டு தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நியாயமான விலையில் சீனி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதுபோன்ற காலங்களில், சுற்றிவளைப்புகள் மற்றும் பிற செயல் முறைகள் அனைவருக்கும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே இந்த சட்ட கட்டமைப்பிற்குள் மட்டுமல்லாமல் மற்ற முறைகள் மூலமும் இதற்கு தீர்வு வழங்க அரசு முயற்சிக்கிறதென்றும் அமைச்சர் கூறினார்.

சீனி பற்றாக்குறை ஏற்படுமென்று நுகர்வோர் மத்தியில் சந்தேகம் இருப்பதாகவும் இந்த நாட்களில் எரிவாயு வாங்க ஏராளமான மக்கள் திரண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


Add new comment

Or log in with...