சினொவெக் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசு முடிவு செய்யவில்லை

சினொவெக் தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்று மருந்து பொருட்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதே தவிர அதனை கொள்வனவு செய்வதற்கு எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டின் நிமித்தம் கொவிஷீல்ட், சினோபாம், ஸ்புட்னிக் - வி, பைஸர், மொடர்னா, சினோவெக் ஆகிய தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சினொவெக் தடுப்பூசி தவிர்ந்த ஏனைய தடுப்பூசிகள் பயன்பாட்டிலும் உள்ளன என்றும் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...