ஓகஸ்டில் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை

ஆரம்பகட்ட ஏற்பாடுகள் துரிதம்

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முடிவடைந்த பின்னர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு நேற்று (12) நாரஹேன்பிட்டி இராணுவ

வைத்தியசாலையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் நேற்று தடுப்பூசி செலுத்தும் ஆரம்பமாகியது . இந்த திட்டம் இன்று(13) நிறைவடையும். நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.


Add new comment

Or log in with...