டெல்டா அச்சுறுத்தல்: குறிப்பிட்ட சதவீதமானோருக்கு முழுமையான தடுப்பூசி அவசியம்

டெல்டா அச்சுறுத்தல்: குறிப்பிட்ட சதவீதமானோருக்கு முழுமையான தடுப்பூசி அவசியம்-Delta Variant-Most Transmissible Variant-Major Threat to Unvaccinated or Partially Vaccinated-Chandima Jeewandara

மிக வேகமாக பரவும் டெல்டா கொவிட் வைரஸ் திரிபு இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் பகுதியளவில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு பாதிப்பாக அமையலாமென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஒரு குறிப்பிடத்தக்க சதவீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி போடும் வரை இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது முக்கியமாகுமென தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொவிட்-19 பரவல் தொடர்பான ஆபத்து இன்னும் தணியவில்லை என்பதையும் அவர் தனது ட்விற்றர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...