மேலும் 8 நாடுகளிலிருந்து இலங்கைக்குள் நுழைய தடை

மேலும் 8 நாடுகளிலிருந்து இலங்கைக்குள் நுழைய தடை-Passengers with Travel History to 8 More Countries Not Permitted to Enter Sri Lanka from July 01

எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் 8 ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை வர அனுமதிக்கப்படமாட்டாது என, அறிவிக்கப்பட்டுள்ளது

அனைத்து விமான சேவைகளுக்குமாக குறித்த அறிவிப்பை, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அங்கோலா, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, ஸ்வாசிலாந்து, சாம்பியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு 14 நாட்களுக்குள் பயணித்த பயணிகள், ஜூலை 01 முதல் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி வரை இத்தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 நாடுகளிலிருந்து இலங்கைக்குள் நுழைய தடை-Passengers with Travel History to 8 More Countries Not Permitted to Enter Sri Lanka from July 01

Add new comment

Or log in with...