தனிமைப்படுத்தல் மீறல்; இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

தனிமைப்படுத்தல் மீறல்; இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது-Travel Restrictions-More than 40k Arrested So Far

- ட்ரோன் மூலம் இதுவரை 143 பேர் கைது
- கடந்த 24 மணித்தியாலங்களில் 1,082 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில், கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 40,674 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,082 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கண்டி, மாத்தளை, குளியாப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றையதினமும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்பதால் தொடர்ந்தும் பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வாழைத்தோட்டம், மருதானை பிரதேசங்களில் ட்ரோன் மூலம் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது பயணக்கட்டுப்பாட்டை மீறியமை தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இதுவரை ட்ரோன் மூலமான நடவடிக்கையில் மொத்தமாக 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...