நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு

நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு-Inter Province Travel Restriction From Midnight-No Buses & Train Operated

- அவசியமேற்படின் மாவட்டங்களிடையேயும் கட்டுப்பாடு
- பஸ், புகையிரத போக்குவரத்து நள்ளிரவுடன் மட்டுப்பாடு

இன்று (11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நேற்று (10) அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் இன்று (11) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதோடு, மே 30ஆம் திகதி வரை அது அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், இக்கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கு பொருந்தாது என, இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் நிலைமைகளைப் பொறுத்து, அவசியம் ஏற்படின், மாவட்டங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுமென, ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய, மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் புகையிரத சேவைகள் யாவும், இன்று (11) நள்ளிரவுடன் இடைநிறுத்தப்படுவதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...