புதிய தலைவர்களாக எல்கர், பவுமா நியமனம் | தினகரன்

புதிய தலைவர்களாக எல்கர், பவுமா நியமனம்

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக டெம்பா பவுமா, நியமிக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அதேபோல டெஸ்ட் அணியின் தலைவராக டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். எல்கர் முன்னதாக ஜூலை 2017இல் லோர்ட்ஸில் நடந்த ஒரு டெஸ்டிலும், 2019 ஜனவரியில் பாகிஸ்தானுக்கு எதிராக வாண்டரர்ஸில் நடந்த டெஸ்டிலும் தேசிய 19 வயதுக்குட்பட்ட அணியான தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கும் தலைமை தாங்கியுள்ளார்.

முன்னதாக டு பிளெஸிஸ் அணித்தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து கடந்த ஆண்டு பெப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு மட்டுப்படுத்தப்பட்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக குயின்டன் டி கொக் பெயரிடப்பட்டார்.

இதன்பிறகு டிசம்பரில், 2020-21 சீசன் முடியும் வரை டெஸ்ட் அணியின் தலைவராக செயற்பட்டார். இதில் ஏழு போட்டிகளில் ஐந்தில் அணி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அவர் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...