சத்தியாக்கிரகப் போராட்டம்: 19ஆவது நாளாகவும் மக்கள் கடும் கோஷம் | தினகரன்

சத்தியாக்கிரகப் போராட்டம்: 19ஆவது நாளாகவும் மக்கள் கடும் கோஷம்

வவுனியா, பூந்தோட்டம் ஸ்ரீநகர் கிராம மக்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த (09) இல் முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் 19நாளாக   நேற்றும் தொடர்ந்தது.காணி உரிமைப் பத்திரங்கள் வழங்காது இருபது வருடங்களாக  ஏமாற்றப்படுவதாகக் கூறியே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றனர். எனினும் அரசியலவாதிகள் இதைக் கண்டு கொள்ளாதுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

பலவருடங்களாகியும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இந்த விடயத்தில் எவரும் கரிசனை கொள்ளவில்லை எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். 

போராட்டம் 19நாட்களைக் கடந்து விட்டன. வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒரு சிலர் கூட, இப்பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறியவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர். 

இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் வவுனியா தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராசசிங்கம் ஆகியோர் மாத்திரமே வருகை தந்து தமது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதாகவும் இவர்கள் தெரிவித்தனர். 

20வருடங்களாகியும் தமக்கு காணி, உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் இல்லை. மைதானம் இல்லாதுள்ளது.வீட்டுத்திட்டம் வழங்கப்படாதமை என்பவற்றுக்கே இவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 

ஓமந்தை விஷேட நிருபர்

 

 

 


Add new comment

Or log in with...