2nd Test; SLvSA: தென்னாபிரிக்கா 10 விக்கெட்டுகளால் வெற்றி

- போட்டியின் நாயகன் தொடரின் நாயகனாக டீன் எல்கர் தெரிவு
- தொடர் 2-0 என வெற்றி

இலங்கைக்கு எதிராக ஜெஹனஸ்பேர்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் தென் ஆபிரிக்க அணி இலகுவாக வெற்றிபெற்றது.

ஏய்டன் மார்க்ராம் 36 ஓட்டங்களுடனும் டீன் எல்கர் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என முழுமயாகக் கைப்பற்றிய தென் ஆபிரிக்கா, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 120 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 211 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய தென் ஆபிரிக்கா 67 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி அந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி அடைந்தது.

இப் போட்டி மூன்றாம் நாளான நேற்றைய மதிய போசன இடைவேளைக்கு சற்றுப் பின்னர் முடிவுக்கு வந்தது.

ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 103 ஓட்டங்கள் பெற்று தனது 10 ஆவது சதத்தை பெற்றார்.

செஞ்சூரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றிருந்தது.இன்னும் இரண்டு நாட்கள் போட்டி முடிவுறுவதற்கு மீதமாகவுள்ளது.

போட்டியின் நாயகனாக டீன் எல்கர் தெரிவானார். இலங்கை அணி எதிர்வரும் 14 ம் திகதி இங்கிலாந்து அணியை காலி மைதானத்தில் எதிர்கொள்கிறது.தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் பயணமாவுள்ளது. அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது.


Add new comment

Or log in with...