சம்பந்திக்கு பொது மன்னிப்பு அளித்தார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப் தனது முன்னாள் தேர்தல் பிரசார முகாமையாளர் போல் மனபோர்ட், முன்னாள் ஆலோசகர் ரொஜர் ஸ்டோன் மற்றும் தனது மருமகனின் தந்தையான சம்பந்தி சார்லஸ் குஷ்னர் ஆகியோருக்கும் பொது மன்னிப்பு அளித்துள்ளார்.

2016 தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணையில் 2018 ஆம் ஆண்டில் மனபொர்ட் குற்றங்காணப்பட்டிருந்தார்.

கொங்கிரஸிற்கு பொய் கூறியதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஸ்டோனுக்கு டிரம்ப் தண்டனை குறைப்பு அளித்துள்ளார்.

கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தோர்தலில் தோல்வியுற்ற டிரம்ப் அடுத்த மாதம் பதவியில் இருந்து வெளியேறவிருக்கும் நிலையில் அவர் கடைசி நேரத்தில் 29 பேருக்கு பொது மன்னிப்பு அளித்துள்ளார்.

இதில் கடந்த புதன்கிழமை இரவு இருபத்தி ஆறு பேர் முழுமையான பொது மன்னிப்பு பெற்றிருப்பதோடு மேலும் மூவருக்கு தண்டனை குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் வரி ஏய்ப்பு, பிரசார நிதி சார்ந்த குற்றங்கள், சாட்சிகளைக் கலைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர் டிரம்பின் சம்பந்தி சார்லஸ் குஷ்னர். இவர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பின் மாமனாராவார்.


Add new comment

Or log in with...