அங்குரார்ப்பண எல்.பி.எல் கிண்ணம் மகுடம் சூடுவது யார் ?

பரீத்

ஜப்னா - கோல் அணிகள் இன்று பலப்பரீட்சை

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டியில் கிண்ணத்துக்காக யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி கோல் கிளாடியேட்டர்ஸ் அணியுடன் இன்று 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இலங்கை கிரிக்கெட், ஐ.பி.ஜி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.

அதிலும் குறிப்பாக, இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர்கள் பலர் சிறப்பாக கலக்கியிருந்தமை மற்றுமொரு சிற ப்பம்சமாகும்.

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் சம்பியன் பட்டத்தை திசர பெரேராவின் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியா? அல்லது பானுக ராஜபக்ஷவின் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியா? வெல்லும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள்.

ஜப்னா ஸ்டா லியன்ஸ்

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் முதல் நான்கு போட்டிகளில் ஜோராக வெற்றியீட்டி முதல் அணியாக அரையிறுதிக்குச் சென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, கடைசி நான்கு போட்டிகளில் 3இல் தோல்வியைத் தழுவி அரையிறுதிக்கான தரப்படுத்தலில் 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

அந்த அணி விளையாடிய கடைசி லீக் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியிடம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

எனவே, தொடரின் ஆரம்பத்தில் முன்னணி அணியாக வலம்வந்த ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஏன் பிற்பகுதியில் தடுமாறியது. முதல் நான்கு போட்டிகளிலும் உறுதியான பதினொருவர் அணியுடன் களமிறங்கிய அந்த அணி, பிறகு விளையாடிய நான்கு போட்டிகளிலும் விஜயகாந்த் வியாஸ்காந்த், சரித் அசலங்க மற்றும் மஹேஷ் தீக்ஷன ஆகிய மூன்று இளம் வீரர்களுக்கு மாத்திரமே மாறி மாறி சந்தர்ப்பம் கொடுத்தது.

மறுபுறத்தில் அந்த அணி பந்துவீச்சில் பலமிக்கதொரு வரிசையை கொண்டாலும், ஆரம்ப துடுப்பாட்டம், மத்திய வரிசை என சறுக்கத் தொடங்கியது. எனவே முதல் நான்கு போட்டிகளிலும் களமிறங்கியவாறு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி விளையாடினால் நிச்சயம் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

இதில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், இம்முறை போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரராகவும் வலம்வருகின்ற சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க மாத்திரம் தான் அந்த அணிக்காக தொடர்ச்சியாக பிரகாசித்து வருகின்றார்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி இறுதிப் போட்டியில் வெற்றி கொள்ள வேண்டுமாயின் அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகிய வீரர்கள் இறுதி பதினொருவர் அணியில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

அதேபோல, இளம் வீரர்களான வியாஸ்காந்த், மஹேஷ் தீக்ஹன மற்றும் சரித் அசலங்க ஆகிய மூவரில் யாருக்காவது வாய்ப்பு கொடுத்தால் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பா ர்கள் என எதிர்பார்க்க ப்படுகின்றது.

திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு எவ்வாறான யூகங்களை கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

கோல் க்ளேடியேட்டர்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக்கில் ஆரம்பத்தில் இருந்து தோல்விகளை சந்தித்து வந்த கோல் க்ளேடியேடர்ஸ் அணி, இரண்டு வெற்றிகளை மாத்திரம் பெற்றுக்கொண்டு இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் நான்காவது அணியாக அரையிறுதிக்குத் தெரிவாகி கொழும்பு அணியை வெற்றி கொண்டது.

கண்டி டஸ்கர்ஸ் அணியுடன் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி, எதிர்பாராத திருப்புமுனையுடன் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் முதல் அணியாக உரிமைத்துவத்தை பெற்றுக்கொண்ட கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியானது பாகிஸ்தான் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக விளங்கியது. எனினும், முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒருசில வீரர்கள் தொடரிலிருந்து விலகியதால் அந்த அணிக்கு பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

அதிலும் குறிப்பாக அந்த அணியின் பொறுப்பு தலைவரான சஹீட் அப்ரிடி, தனிப்பட்ட காரணங்களுக்காக இடைநடுவில் நாடு திரும்பினாலும், இளம் வீரர்களுடன் களமிறங்கி சாதிக்கலாம் என்பதை கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி நிரூபித்துக் காட்டியுள்ளது.

அதுமாத்திரமின்றி, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் அதிகளவு இளம் வீரர்களைக் கொண்ட அணியாகவும், பெரும்பாலான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்த அணியாகவும் கோல் க்ளேடி யேட்டர்ஸ் அணி விளங்கியது.

மறுபுறத்தில் கோல் க்ளேடி யேட்டர்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி வந்த வீரராக தனுஷ்க குணதிலக்க விளங்கு கின்றார்.

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் வெற்றி கரமான துடுப்பாட்ட வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற தனுஷ்க குணதிலக்க, இதுவரை 8 போட்டிகளில் விளையாடி நான்கு அரைச்சதங்களுடன் 462 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 64 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.

இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், தனுஷ்க குணதிலக்க இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 30 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளதுடன், பவர் ப்ளேயில் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களைக் குவித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை கிரிக்கெட்டின் அடுத்த குமார் சங்கக்கார தனுஷ்க குணதிலக்க என கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் பொறுப்பு தலைவரான சஹீட் அப்ரிடி டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

கண்டி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுக் கொண்ட கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பலம் மிக்க யாழ்ப்பாணம் அணிக்கெதிரான போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி எவ்வாறான வியூகங்களை கையாளப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ, செக்விக் வோல்டன், மொஹமட் ஆமிர், நுவன் துஷார, தனஞ்சய லக்ஷான், லக்ஷான் சந்தகென் உள்ளிட்ட வீரர்கள் இறுதிப் போட்டியில் பிரகாசித்தால் நிச்சயம் அந்த அணி வெற்றி பெறும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.

 


Add new comment

Or log in with...